English Tamil Telugu Hindi
வேகமாக தேட

எங்களைப் பற்றி

பேன்சி ப்ளோரிஸ்ட்டின் நோக்கம் வியாபாரம் செய்வது மட்டுமல்ல, பாரம்பரியத்தை வளரச்செய்வதேயாகும். திரு. நம்மாழ்வார் பிறந்த இடமும், புண்ணிய ஸ்தலமுமான ஆழ்வார்துரிநகரி என்ற கிராமத்தில் பிறந்த லக்ஷ்மண் வரதன் தனது எட்டு வயதிலேயே கோயிலுக்கு மலர் மாலை செய்யும் கலையை கற்றுணர்ந்தார். அவர் 1965−ல் கனடா நாட்டுக்கு வந்து, படித்து பட்டம் பெற்று பொறியாளராக பல ஆண்டுகள் பணி புரிந்த காலத்தில், அவருக்கு 1988 வரை தனது குடும்பக்கலையை செய்ய தக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 1988−ல் கனடா நாட்டிலுள்ள டொரன்டோ என்னுமிடத்தில் இந்து சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இந்து கோயிலைக் கட்டினர். வரதன் ஓய்வு நேரத்தில், தனது சிறுவயதில் கற்ற கலைத்திறனைக் கொண்டு பல வண்ண மலர் மாலைகளை செய்து அந்த கோயிலுக்கு வழங்கி தொண்டாற்றியதால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆழ்வார்துரிநகரியின் பாரம்பரிய நறுமணத்தை உணர்ந்தனர்.

மலர் மாலைகளின் தேவை அதிகரித்தபோது, வரதன் தனது முதல் இந்திய மலர் அங்காடியை திறந்து வட அமெரிக்காவில் வாழும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அர்ப்பணித்தார். பேன்சி ப்ளோரிஸ்ட், இப்பொழுது கனடா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் தேவையான புத்தம்புதிய வண்ண மலர் மாலைகளைச் செய்து வழங்கி வருகிறது. மேலும் பேன்சி ப்ளோரிஸ்ட் புத்தம்புதிய மல்லிகைப் பூக்களையும், இதர நறுமணம் மிக்க பல்வேறு மலர்களையும் கொண்ட மலர் மாலைகளை ஒவ்வொரு வாரமும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்கள் முக்கிய நோக்கமாகும். நாங்கள் அனுப்பும் மலர்கள் சரியான நேரத்தில் நல்ல முறையில் உங்கள் கைகளில் கிடைத்த பிறகே எங்கள் இணைய தள விற்பனைப் பிரிவு உங்கள் க்ரெடிட் கார்டிலிருந்து கட்டணத்தை எடுத்துக்கொள்ளும். மலர்கள் மற்றும் மாலைகளுக்கான ஆர்டர்களை நீங்கள் எந்த நேரத்திலும் கொடுக்கலாம். விநியோக தேதியை கம்ப்யூட்டர் உங்களிடம் கேட்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தேதியில் பெட்எக்ஸ் மூலமாக எங்கள் தயாரிப்புகளை உங்களுக்கு டெலிவரி செய்வோம்.

வரதன், தனது இன்ஜினீயரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல அழகிய திருமண மண்டபங்களை வடிவமைத்து கட்டினார். எங்களது திருமண மண்டபங்கள் முற்றிலும் புத்தம் புதிய நறுமண மலர்களால் அலங்கரிக்கப்படுவதாலேயே அவை தனித்தன்மை வாய்ந்தவையாகும்.

எங்கள் சேவையைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள கீழ்கண்ட முக்கிய கோயில்களின் மேலாளர்களை தொடர்பு கொள்ள:

எஸ். வி. டெம்பிள்
பிட்ஸ்பர்க், பிஏ (412)373-3380

பாலாஜி கோயில்
அரோரா, ஐஎல் (630)844-2252.

தி ஹிந்து டெம்பிள் ஆஃப் அட்லாண்டா
ரிவர்ஸைட், ஜிஏ (770)907-7102

ஹிந்து டெம்பிள் ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியா
காலபாஸாஸ், சிஏ (818)880-5552

எங்ளுடைய இணையதளத்தைப் பார்த்ததால் உங்கள் இல்லத்திருமணத்திற்கும் அல்லது விசேஷத்திற்கும் தேவையான அனைத்தும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவின் நறுமணத்தை உங்கள் இல்லங்களுக்கு சேர்ப்பதே பேன்சி ப்ளோரிஸ்ட்டின் முக்கிய குறிக்கோளாகும்.