English Tamil Telugu Hindi
வேகமாக தேட

Welcome to Fashiongoat

பேன்சி ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு வரவேற்கிறோம்

பேன்சி ப்ளோரிஸ்ட்டின் நோக்கம் வியாபாரம் செய்வது மட்டுமல்ல, பாரம்பரியத்தை வளரச்செய்வதேயாகும். திரு. நம்மாழ்வார் பிறந்த இடமும், புண்ணிய ஸ்தலமுமான ஆழ்வார்துரிநகரி என்ற கிராமத்தில் பிறந்த லக்ஷ்மண் வரதன் தனது எட்டு வயதிலேயே கோயிலுக்கு மலர் மாலை செய்யும் கலையை கற்றுணர்ந்தார். 1988–ல் வரதன் கனடா நாட்டிலுள்ள இந்துக்கோயில்களுக்கு பல வண்ண மலர் மாலைகளை செய்து வழங்கி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆழ்வார்துரிநகரியின் பாரம்பரிய நறுமணத்தை உணர்ந்தனர்.  மலர் மாலைகளின் தேவை அதிகரித்தபோது, வரதன் தனது முதல் இந்திய மலர் அங்காடியை திறந்து வட அமெரிக்காவில் வாழும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அர்ப்பணித்தார். பேன்சி ப்ளோரிஸ்ட், இப்பொழுது கனடா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் தேவையான புத்தம்புதிய வண்ண மலர் மாலைகளைச் செய்து வழங்கி வருகிறது. மேலும் பேன்சி ப்ளோரிஸ்ட் புத்தம்புதிய மல்லிகைப் பூக்களையும், இதர நறுமணம் மிக்க பல்வேறு மலர்களையும் கொண்ட மலர் மாலைகளை ஒவ்வொரு வாரமும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்கள் முக்கிய நோக்கமாகும். நாங்கள் அனுப்பும் மலர்கள் சரியான நேரத்தில் நல்ல முறையில் உங்கள் கைகளில் கிடைத்த பிறகே எங்கள் இணைய தள விற்பனைப் பிரிவு உங்கள் க்ரெடிட் கார்டிலிருந்து கட்டணத்தை எடுத்துக்கொள்ளும்.

இந்தியாவின் நறுமணத்தை உங்கள் இல்லங்களுக்கு சேர்ப்பதே பேன்சி ப்ளோரிஸ்ட்டின் முக்கிய குறிக்கோளாகும்.

எல்லா வகைகளும்

திருமண பூ மாலை

இது 5 அடி மொத்த நீளமும், ஒவ்வொரு பக்கமும் 2.5 அடி நீளமும்...

இங்கே அலுத்தவும்.....

மல்லிகை மற்றும் பூச்செண்டுகள்

முல்லை மலர்ச்சரங்களின் பெட்டியில் 10 அடி....

இங்கே அலுத்தவும்.....

திருமணத்திற்க்கான பொருட்கள்

தேங்காய் பூக்கள் அமெரிக்காவிலுள்ள....

இங்கே அலுத்தவும்.....

திருமண அலங்காரங்கள்

எங்களிடம் இரண்டு ஊஞ்சல்கள் கிடைக்கும்....

இங்கே அலுத்தவும்.....



கோவில் மாலைகள்

4 அடி துளசி மாலை, குஞ்சலத்துடன். இது இந்தியாவிலிருந்து....

இங்கே அலுத்தவும்.....
இந்திய மலர்க்கொத்து

இதை சம்பங்கி மலர்கள், சம்பங்கி மலர்களால் தயாரித்து....

இங்கே அலுத்தவும்.....
கோலம்

இது ஒரு 3 அடி அளவு கொண்ட உருண்டை வடிவ கோலமாகும்....

இங்கே அலுத்தவும்.....
பொன்வண்ணப் பூக்கள்

இவை கலிஃபோர்னியா
- விலிருந்து கொண்டு வரப்படுகின்றன....

இங்கே அலுத்தவும்.....